தென்கரும்பலூர் ஊராட்சியில் சிறப்பு மருத்துவ முகாம்

தண்டராம்பட்டு, ஜன.8: தண்டராம்பட்டு அடுத்த தென்கரும்பலூர் ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. முகாமை எம்பி சி.என்.அண்ணாதுரை தொடங்கி வைத்தார். முகாமில் பொதுமக்களின் ரத்தத்தில் இரும்பு சத்து, சக்கரை நோய், கொழுப்பின் அளவு, ரத்தப் பரிசோதனை, சிறுநீரில் உப்பு, சர்க்கரை அளவு கண்டறிதல், கர்ப்பிணிகளுக்கு பெட்டகம் வழங்கி சோதனைகள் நடத்தப்பட்டு மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதில் வட்டார மருத்துவர் செலின் மேரி, ஒன்றியக்குழு தலைவர் பரிமளா, பிடிஓ மகாதேவன், முன்னாள் அறங்காவலர் குழு உறுப்பினர் கோவிந்தன், ஊராட்சி மன்ற தலைவர் பாஸ்கரன், மாவட்ட கவுன்சிலர் திவ்யா சபாரத்தினம், ஒன்றிய கவுன்சிலர் விஜயராஜ், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் முத்துகிருஷ்ணன், வார்டு உறுப்பினர்கள், செவிலியர்கள், ஊராட்சி செயலாளர் ரகு, பொதுமக்கள், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: