×

வண்டியூர் மாரியம்மன் கோயிலில் தெப்பத்திருவிழா துவக்கம் 18ம் தேதி தெப்பத் திருவிழா

மதுரை, ஜன. 8: மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பத் திருவிழா நேற்று மீனாட்சியம்மன் கோயில் சுவாமி சன்னதியில் காலை 10.20 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து பட்டர்கள் சிறப்பு பூஜை நடத்தினர். தெப்பத்திருவிழாவுக்கு முன்னோட்டமாக தெப்பம் முட்டுத்தள்ளுதல் நிகழ்ச்சி வரும் 16ம் தேதி, சிந்தாமணியில் கதிரறுப்பு திருவிழா 17ம் தேதி நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான தெப்பத்திருவிழா மாரியம்மன் தெப்பக்குளத்தில் 18ம் தேதி தைப்பூசத்தன்று நடைபெற உள்ளது. அன்றைய தினம் மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் கோயிலில் இருந்து புறப்பாடாகி தெப்பக்குளத்தை சென்றடைவர்.

அங்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் சுவாமியும், அம்மனும் காலை 10.40 மணி முதல் 11.04 மணிக்குள் எழுந்தருளி தெப்பத்தைச் சுற்றி 2 முறை, இரவு ஒரு முறையும் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பர். அதன் பின்னர் இரவு 7 மணிக்கு மேல் சுவாமி தங்கக்குதிரை வாகனத்திலும், அம்மன் அவுதா தொட்டிலிலும் எழுந்தருளி மீண்டும் கோயிலுக்கு புறப்படுவார்கள். அன்றைய தினம் சுவாமியும், அம்மனும் தெப்பத்திற்கு சென்று மீண்டும் கோயிலுக்கு திரும்பும் வரை மீனாட்சியம்மன் கோயில் நடை சாத்தப்பட்டு இருக்கும். விழா ஏற்பாடுகளை இணை கமிஷனர் செல்லத்துரை மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Tags : Boat Festival ,Vandiyoor Mariamman Temple ,
× RELATED சீனாவின் டிராகன் படகுத் திருவிழா கோலாகலம்..!!