×

பண்ருட்டி பகுதியில் தரமற்ற பூச்சி மருந்தை தெளித்ததால் கருகி சேதமான கத்தரி செடிகள்

பண்ருட்டி, ஜன. 7:    பண்ருட்டி அருகே ஒறையூர், கரும்பூர், கண்டரக்கோட்டை, கொங்கராயனூர், குச்சிப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் தற்போது கத்தரி விவசாயம் நடந்து வருகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு நாற்று நடப்பட்டு தற்போது பூக்கள் விடும் தருவாயில் உள்ளது. கத்தரி செடிகள் மீது பூச்சி தாக்குதல் ஏற்பட்டதன் காரணமாக கொங்கராயனூரை சேர்ந்த விவசாயி மேல்பட்டாம்பாக்கத்தில் உள்ள ஒரு பூச்சி மருந்து கடையில் உள்ள மருந்து வாங்கி நிலத்தில் அடித்துள்ளார். சில தினங்களில் நிலத்தில் பயிரிட்ட கத்தரி செடிகள் முழுவதும் கருகியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட பூச்சி மருந்து கடையில் கேட்டபோது எவ்வித பதிலும் இல்லை. இதேபோல் குச்சிப்பாளையத்தை சேர்ந்த விவசாயி செந்தில் நடந்த சம்பவம் தெரியாமல் அதே கடையில் பூச்சி மருந்து வாங்கி கத்தரியில் தெளித்தபோது கத்தரி செடிகள் கருகிவிட்டன. இதனால் அதிர்ச்சியடைந்த விவசாயி சம்பந்தப்பட்ட கடை உரிமையாளரிடம் கேட்டபோது சரியான பதில் கூறாமல் இருந்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. 10க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிப்படைந்துளளனர். இதுகுறித்து அண்ணாகிராமம் வேளாண்மை உதவி இயக்குனர் சுரேஷிடம் புகார் தெரிவித்துள்ளனர். புகாரின் பேரில் சம்பந்தப்பட்ட பூச்சி மருந்து கடையில் ஆய்வு செய்யப்பட்டு மருந்துகளை உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.

Tags : Panruti ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு