×

இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு 6 சட்டமன்ற தொகுதிகளில் 16,32,639 வாக்காளர்கள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை கலெக்டர் வெளியிட்டார். அதன்படி 6 சட்டமன்ற தொகுதிகளில் மொத்தம் 16 லட்சத்து 32 ஆயிரத்து 639 வாக்காளர்கள் உள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில், இறுதி வாக்காளர் பட்டியலை, கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி அனைத்து கட்சியினர் முன்னிலையில் நேற்று வெளியிட்டார். பின்னர் அவர் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டதில், 29 ஆயிரத்து 74 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டு, 3 ஆயிரத்து 716 வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.

ஊத்தங்கரை தொகுதியில் 1,20,863 ஆண் வாக்காளர்கள், 1,20,565 பெண் வாக்காளர்கள், இதர வாக்காளர்கள் 57 உட்பட 2 லட்சத்து 41,485 பேரும், பர்கூர் தொகுதியில் 1 லட்சத்து 23,508 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 27,170 பெண் வாக்காளர்கள், 16 இதரர் என 2 லட்சத்து 50,694 பேர் உள்ளனர். கிருஷ்ணகிரி தொகுதியில் 1 லட்சத்து 32,216 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 37,885 பெண் வாக்காளர்கள் மற்றும் 38 இதரர் உட்பட 2 லட்சத்து 70,139 பேரும், வேப்பனஹள்ளி தொகுதியில் 1 ஒரு லட்சத்து 29,320 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 25,256 பெண் வாக்காளர்கள், 34 இதரர் உட்பட 2 லட்சத்து 54,610 வாக்காளர்களும், ஓசூர் தொகுதியில் 1 லட்சத்து 83,746 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 77,192 பெண் வாக்காளர்கள் 107 இதரர் உட்பட 3 லட்சத்து 61,045 பேரும்உள்ளனர். தளி தொகுதியில் 1 லட்சத்து 30,350 ஆண் வாக்காளர்கள் 1 லட்சத்து 24,277 பெண் வாக்காளர்கள், இதரர் 39 பேர் உட்பட 2 லட்சத்து 54,666 பேர் என மாவட்டம் முழுவதும் 16 லட்சத்து 32,639 வாக்காளர்கள் உள்ளனர்.

இறுதி வாக்காளர் பட்டியல், கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதில் தங்கள் பதிவுகள் மற்றும் திருத்தங்கள் குறித்து பொதுமக்கள் சரி பார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு கலெக்டர் ஜெயசந்திர பானுரெட்டி தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியில் டிஆர்ஓ ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகன், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் பாலசுப்பிரமணியம், ஓசூர் சப்-கலெக்டர் தேன்மொழி மற்றும் நகராட்சி, பேரூராட்சி செயல் அலுவலர்கள் மற்றும் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED கரிய காளியம்மன் கோயிலில் தீமிதி விழா