பண்ருட்டி அருகே ஒரே தெருவில் 3 பேருக்கு கொரோனா

பண்ருட்டி, ஜன. 6: பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு அதிகளவில் இருந்து வந்தது. புதுப்பேட்டை பகுதியில் கொரோனா பாதித்து இறந்தவர் உடலை ஆள்மாறாட்டம் செய்து புதைத்தனர். பின்னர் நீண்ட விசாரணைக்கு பிறகு மீண்டும் உடலை ேதாண்டி எடுத்து, அவரவர் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. தற்போது, புதிய வகையான ஒமிக்ரான் வைரஸ் பரவி வருகிறது. இதையடுத்து தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகிறது. இந்நிலையில் பண்ருட்டி அருகே பணப்பாக்கத்தில் ரெட்டியார் தெருவை சேர்ந்த 34, 40, 53 வயதுள்ள ஆண்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஒறையூர் சுகாதாரத்துறை ஆய்வாளர் சத்தியநாராயணன் விரைந்து வந்து சம்பவ இடத்தில் இருந்து மூவரையும் அழைத்து சென்று கடலூர் மருத்துவமனையில் சேர்த்தார். அப்பகுதி முழுவதும் கிருமி நாசினி தெளித்து மக்கள் செல்வதற்கு பாதுகாப்பு பணிகள் செய்யப்பட்டது. 

Related Stories: