×

கனமழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்க கோரி கோட்டூரில் விவசாய சங்கத்தினர் சாலை மறியல்

மன்னார்குடி, ஜன.5:பருவம் தவறி பெய்த கன மழை காரணமாக பாதிக்கபட்ட சம்பா தாளடி பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு ரூ 30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும். கடந்த ஆண்டு பேரிடர் காரணமாக அழிந்து போன சம்பா தாளடி பயிர்களுக்கு 2020-21 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டுத்தொகை கிடைக்காமல் பூஜ்ய சதவீதமாக அறிவித்த வருவாய் கிராமங்களுக்கு உடனே பயிர்காப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல் வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில பொதுச்செயலாளர் (பொ) மாசிலாமணி தலைமையில் 200க்கும் மேற்பட் டோா் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில், இந்திய கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் செந்தில்நாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட துணை தலைவர் விசுவநாதன், மாவட்ட துணைச்செயலாளர் சவுந்தரராஜன், ஒன்றிய செயலாளர் பரந்தாமன், ஒன்றிய தலைவர் அறிவுடை நம்பி, ஒன்றிய பொருளாளர் முருகேசன் உள்ளிட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இது குறித்து தகவல் அறிந்து திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி சோமசுந்தரம், கோட்டூர் வட்டார வேளாண் துணை இயக்குனர் தங்கபாண்டியன், இன்ஸ்பெக்டர்கள் சிவக்குமார், கழனியப்பன் உள்ளிட்டோர் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு கோரிக்கைகள் அனைத்தும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : Farmers' Union ,Gori Kottur ,
× RELATED மோடியை எதிர்த்து போட்டியிட வாரணாசி...