×

திருத்துறைப்பூண்டி அருகே நேமம் பகுதியில் மழையால் சாய்ந்த நெற்கதிர்களை நிமிர்த்தி கட்டும் பணியில் விவசாயிகள்

திருத்துறைப்பூண்டி, ஜன.5: திருத்துறைப்பூண்டி அருகே நேமம் பகுதியில் மூன்று நாட்கள் பெய்த தொடர் மழையால் அறுவடைக்கு தயாரான நிலையில் 400 ஏக்கரில் சம்பா நெல் கதிர்கள் மழைநீரில் சாய்ந்து மூழ்கியது. மூழ்கி சாய்ந்த நெல் பயிர்களை விவசாயிகள் நிமிர்த்தி கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். திருத்துறைப்பூண்டி வட்டாரத்தில் சம்பா, தாளடி பயிர்கள் சுமார் 30,000 ஏக்கரில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ளது. சம்பா பயிர்கள் வளர்ச்சியடைந்து பால்பருவம் மற்றும் கதிர் வெளிவரும் நிலை தாளடி பயிர்களும் சம்பா நெல் கதிர்கள் அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது. இந்நிலையில் திருத்துறைப்பூண்டி அருகே நேமம் பகுதியில் தொடர் மழையில் சுமார் 400 ஏக்கரில் அறுவடைக்கு தயாரான சம்பா நெல் பயிர்கள் முற்றிலும் சாய்ந்து நீரில் மூழ்கியது. இந்த நெல் பயிர்களை காப்பாற்ற விவசாயிகள் நெல் கதிர்களை நிமிர்த்தி கட்டி பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் நேமம் கிராமவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Nemam ,Thiruthuraipoondi ,
× RELATED திருத்துறைப்பூண்டி அருகே...