×

வயநாடு மாவட்டத்தில் திமுக அலுவலகம் திறப்பு

ஊட்டி: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் புதிதாக திமுக அலுவலகம் திறந்து வைத்து உறுப்பனர் சேர்க்கை முகாம் நடத்தப்பட்டது. கேரள மாநிலம் வயநாடு மாவட்ட திமுக அலுவலக திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் சுல்தான் பத்தேரியில் நடந்தது. கேரள மாநில திமுக அமைப்பாளர் முருகேஷ் தலைமை வகித்தார். வயநாடு மாவட்ட பொறுப்பாளர் நவ்சாத் வரவேற்றார்.

கேரள மாநில திமுக அவைத் தலைவர் மூணார் மோகன்தாஸ், நீலகிரி மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார், பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பாண்டியராஜ், முஸ்தபா, ஒன்றிய மற்றும் நகர செயலாளர்கள் காசிலிங்கம், சிவானந்தராஜ், சுஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீலகிரி மாவட்ட செயலாளர் முபாரக் சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தார். தொடர்ந்து புதிய உறுப்பினர் சேர்ப்பு முகாம் துவக்கி வைக்கப்பட்டது.

தொடர்ந்து பொதுக்கூட்டம் நடந்தது. இதில், திமுக.,வின் சாதனைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விரிவாக நிர்வாகிகள் பேசினர். இந்நிகழ்ச்சியில், மாவட்ட அணிகளின் அமைப்பாளர்கள் ஆலன், ரெனால்டு வின்சென்ட், துணை அமைப்பாளர்கள் நவ்புல், சேகரன், பிரதீஷ், தமிழழகன், இன்பராஜ், செந்தில், ஒன்றிய மற்றும் நகர நிர்வாகிகள் ஜெயக்குமார், ஞானசேகர், செல்லதுரை, முரளிதரன். முன்னாள் மாவட்ட ஊராட்சி தலைவர் கோமதி, சாம்பியா, சிவமயம், கூடலூர் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் பாரதி, சிவசங்கர், தினேஷ், மாவன்னதுரை, பிரவீன், தாகீர், புவாத், அரசப், மைமூனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Wayanad district ,
× RELATED கஞ்சா விற்ற வாலிபர் கைது