×

ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் 18 ஆயத்த ஆடைகள் ஏற்றுமதி நிறுவனத்தில் ரூ.12.24 கோடி வரி ஏய்ப்பு

ஈரோடு:  ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் 18 ஆயத்த ஆடைகள் ஏற்றுமதியாளர்களின் நிறுவனத்தில் வணிக வரித்துறை அதிகாரிகள் மேற்கண்ட தணிக்கையில் ரூ.12.24 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என ஈரோடு  வணிக வரி கோட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. ஈரோடு வணிக  வரித்துறையினர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:  ஈரோடு வணிக வரி கோட்டத்தில் உள்ள ஈரோடு, கரூர், திருப்பூர்-1, 2 வணிக  வரி மாவட்டங்களை சேர்ந்த பின்னலாடை, ஆயத்த ஆடை உற்பத்தி மற்றும்  ஏற்றுமதியாளர்கள் தொடர்பான 20 இனங்களில் 3 நிதியாண்டுகளுக்கான கணக்குகள் ஈரோடு கோட்ட வரி விதிப்பு அலுவலர்களால் தணிக்கை செய்யப்பட்டது.

இத்தணிக்கையில்  தவறாக கோரப்பட்ட ஏற்றுமதி திருப்பு தொகை, விற்பனை மறைப்பு, தகுதியற்ற  உள்ளீட்டு வரி தொடர்பாக ரூ.12.24 கோடி குறைகள் கண்டறியப்பட்டது. இதில்,  திருப்பூர் மற்றும் ஈரோடு வணிக வரி மாவட்டங்களில் உள்ள, 18 பின்னலாடை,  ஆயத்த ஆடை உற்பத்தி, ஏற்றுமதியாளர்களின் கடந்த 3 நிதியாண்டு கணக்கு தணிக்கை  செய்ததில் ரூ.7.67 கோடி குறைகள் கண்டறியப்பட்டு, ரூ.1.01 கோடி வரியாக  வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும், ஒரு இனத்தில் சேவை இனங்களுக்காக  செலுத்தப்பட வேண்டிய வரி தொடர்பாக ரூ.4.10 கோடி முன் மொழிவுகள்  தயாரிக்கப்பட்டு வரி வசூல் செய்ய சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு  வருகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Erode ,Tiruppur ,
× RELATED ஈரோடு மேற்கு தொகுதி வாக்கு இயந்திர...