×

சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் `மஞ்சள் பை’ விநியோகம்

ஈரோடு, டிச.24:  ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நேற்று மஞ்சள் பை வழங்கப்பட்டது. தமிழக அரசு  நாம் அன்றாடம் பயன்படுத்தி தூக்கியெறியும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து, மீண்டும் மஞ்சள் பை எனும் விழிப்புணர்வு இயக்கத்தைத் தொடங்கியுள்ளது.  எனவே, பிளாஸ்டிக்கிற்கு எதிரான அரசின் இந்த செயல்பாட்டுக்கு சிக்கய்ய நாயக்கர் கல்லூரி தமிழ்த்துறை, திராவிட இயக்க ஆய்வு மய்யம் ஆகியன ஆதரவு தெரிவிக்கும்விதமாக நேற்று கல்லூரி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் ஆகியோருக்கு மஞ்சள் பை வழங்கப்பட்டது.

மேலும், கல்லூரி முன்பாக பொதுமக்களுக்கும் மஞ்சள் பைகள் இலவசமாக விநியோகிக்கப்பட்டன.இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் சு.மனோகரன் தலைமை வகித்தார். தமிழ் துறைத் தலைவர் ப.கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார். பேராசிரியர்கள் சி.அங்கயற்கண்ணி, க.இராக்கு, இரா.விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்து மஞ்சள் பைகளை விநியோகித்தனர்.

Tags : Sikkayya Nayak College ,
× RELATED கடம்பூர் மலைப்பகுதியில் கன மழை...