×

பண்ருட்டி பகுதியில் நலிவடைந்த நெசவு தொழில்

பண்ருட்டி, டிச. 23:     பண்ருட்டி அருகே தொரப்பாடி பேரூராட்சியில் கடந்த 15 ஆண்டிற்கு முன்பு ஐந்தாயிரத்திற்கு மேற்பட்ட நெசவு கூடங்கள் இருந்தன. சுமார் 20 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட இந்த ஊரில் பெரும்பாலானோர் கைத்தறி தொழிலை நம்பி வாழ்ந்து வந்தனர். விஜயநகர படையெடுப்பில் வந்த படை வீரர்கள் நீண்டகாலம் இதே ஊரில் தங்க நேர்ந்ததால் கன்னட கலப்பு உருவானது. எந்த நேரமும் கைத்தறி நெசவு சத்தம் வீதிக்கு, வீதி வீட்டிற்கு, வீடு கேட்டுகொண்டே இருக்கும். இதன் காரணமாக தீபாவளி, பொங்கல் ஆகிய காலங்களில் புதுப்பேட்டை நெசவாளர்கள் நெய்யும் கைலிகள் அதிளவு பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகளவில் விற்பனையாகும். ஜவுளி கடைகளில் புதுப்பேட்டை கைலி என கேட்டு வாங்குவதுண்டு. அந்தளவிற்கு தரமான கைலிகள் நாளடைவில் கைலியின் உற்பத்தி திறன், கூலி குறைவு, நூல் கிடைக்காமை ஆகியவற்றால் இவற்றின் உற்பத்தி பாதிக்கப்பட்டது. பாரம்பரியமாக இருந்த கைத்தறி நெசவு கூடங்கள் காலப்போக்கில் வெகுவாக குறைந்தன. இதற்கான கூட்டுறவு சங்கங்களும் நலிவடைந்தன. கோட்லாம்பாக்கம், பண்டரக்கோட்டை, குடுமியான்குப்பம், அங்குசெட்டிப்பாளையம், நடுவிரப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சங்கங்கள் பல லட்சங்கள் லாபம் ஈட்டி தந்து உறுப்பினர்களுக்கு பிரித்து கொடுத்தன. தற்போது ஊதியம் கூட பெறமுடியாமல் ஊழியர்கள் உள்ளனர். உரிய கூலி கிடைக்காததால் கைத்தறி நெசவாளர்கள் ஓட்டலில் சர்வேயர் வேலைக்கும், டீ விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. தற்போது ஒன்றிரண்டு கைத்தறிகள் மட்டுமே தென்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் இதுபோன்ற நெசவாளர்களை கண்டறிந்து மீண்டும் நெசவு தொழில் மேம்பட நேரில் கள ஆய்வு செய்து கைலி உற்பத்தியை பெருக்கி, நெசவாளாகளின் வாழ்வாதாரத்தை காப்பாற்ற வேண்டும் என நெசவாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Tags : Panruti ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு