×

குட்டம் ஊராட்சியில் வரும்முன் காப்போம் திட்டம் ஊராட்சி ஒன்றியத்தின் புதிய கட்டிட திறப்பு விழா: எம்எல்ஏ காந்திராஜன் பங்கேற்பு

வேடசந்தூர், டிச. 21: வேடசந்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குட்டம் ஊராட்சியில் ஊராட்சி அலுவலகம் விழா மற்றும் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காந்திராஜன் தலைமை வைத்தார்.  இந்நிகழ்ச்சியில் ஊராட்சி அலுவலகம் கட்டிட பணிக்காக கோட்டூர் கிராமத்தைச் சேர்ந்த வடிவேல் தனக்கு சொந்தமான 17 சென்ட் நிலத்தை அரசுக்கு ஊராட்சி அலுவலகம் கட்டிடம் கட்டுவதற்காக இலவசமாக வழங்கினார். இந்த இடத்தில்  சுமார் 17.4 லட்ச ரூபாய் செலவில் புதிய கட்டிடம் கட்டி திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து வரும் முன் காப்போம் மருத்துவ திட்டம் மற்றும் கோட்டூர் கிராம உயர்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் 47 லட்ச ரூபாய் மதிப்பில் கட்டுவதற்கு பூமிபூஜை  சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காந்திராஜன் முன்னிலையில் நடைபெற்றது. மேலும் கோட்டூர் கிராமத்தில் உள்ள அரசு பள்ளி கட்டிடத்தை பார்வையிட்டார்.

அப்போது சட்டமன்ற உறுப்பினர் எஸ்.காந்திராஜன் பேசுகையில், தமிழக முதல்வர் மிகச் சிறப்பான திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகிறார். தமிழகம் முழுவதும் விபத்தில் காயமடைந்த அல்லது விபத்தில் சிக்குவோருக்கு 48 மணி நேரம் முதல் சிகிச்சையை அரசு ஏற்கும் என்றும், அதற்கு பிறகு காப்பீடு திட்டத்தின் மூலமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்படுவதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்றார்.

வேடசந்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் கவிதா பார்த்திபன், குஜிலியம்பாறை ஒன்றிய செயலாளர் சீனிவாசன், வேடசந்தூர் நகர செயலாளர் கார்த்திகேயன் மாவட்ட துணை அமைப்பாளர் ரவிசங்கர், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் ஜீவா, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் பிரியம் நடராஜன், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆர்கே.பிரபாகரன்,  காவல்துறை ஆய்வாளர் பாலமுருகன், வட்டாட்சியர் மணிமொழி, வட்ட வழங்கல் அலுவலர் முத்துலட்சுமி, ஊராட்சி ஒன்றிய தலைவர் பழனியம்மாள், மாவட்ட கவுன்சிலர்கள் தாமரைச்செல்வி, கவிதா முருகன், தமிழ் செல்வி ராமச்சந்திரன், அவைத்தலைவர் ஆரோன், கட்சி நிர்வாகிகள் பொன்ராம், பெருமாள் ஒன்றிய துணைச்செயலாளர் நாகப்பன், ஊராட்சி ஒன்றிய துணைத்தலைவர் பழனியம்மாள் ,வார்டு உறுப்பினர்கள் தங்கவேல் ,நாகப்பன் ,சின்னத்தாய், சாமியார்தாள், காளீஸ்வரி, மலர்கொடி, தனலட்சுமி, ராஜேந்திரன், சத்தியமூர்த்தி, ஊராட்சி செயலாளர் தங்கவேல்,  உள்ளாட்சி பிரதிநிதிகள் முத்துசாமி ரத்தினவேல், முத்துக்காளை, கருப்புசாமி மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags : Panchayat ,Union ,MLA ,Kandirajan ,
× RELATED துணை பிடிஓ.,க்களுக்கு பிடிஓவாக பதவி உயர்வு