×

விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்

விருத்தாசலம், டிச. 21:   தமிழக  வாழ்வுரிமைக் கட்சி  விருத்தாசலம் நகர செயற்குழு கூட்டம் விருத்தாசலம்  பூதாமூரில் நடைபெற்றது. நகர செயலாளர் சேகர் தலைமை  தாங்கினார். நகர தலைவர்  கந்தசாமி வரவேற்றார். நகர நிர்வாகிகள் சீனுவாசன்,  பாலமுருகன், தங்கமணி‍,  மணிகண்டன், சிகாமணி, ஆனந்தகுமார் முன்னிலை வகித்தனர். கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர்  அறிவழகன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கூட்டத்தில்  விருத்தாசலம் மனிமுக்தாற்றில்  மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவதை  நகராட்சி நிர்வாகம் தடுத்து நிறுத்த வேண்டும். கொம்பாடிகுப்பம்  சுங்கச்சாவடி திறப்பதை கண்டிப்பது,  எதிர் வரும் உள்ளாட்சி தேர்தலில்  விருதை நகரில் 15வார்டுகளில் போட்டியிடுவது. விருத்தாசலம்  விருத்தகிரீஸ்வரர் கோயிலைச் சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாவட்ட  நிர்வாகத்திற்கு வலியுறுத்துவது,  நடவடிக்கை இல்லை என்றால், தவாக சார்பில்  போராட்டம் நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. இதில்  மாநில நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், பாலமுருகன், பாலசுப்ரமணியன், முருகன்,  ஞானசேகரன் உள்பட பலர் கலந்துகொண்டனர். நகர பொருளாளர்  சோதிமுருகன் நன்றி கூறினார்.

Tags : Virudhachalam Viruthakriswarar Temple Occupancies ,
× RELATED பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை