×

ெசவல்பட்டி கிராமத்தில் வாறுகால் கழிவுநீரால் கடும் சுகாதாரக்கேடு

சிவகாசி, டிச. 16: சிவகாசி அருகே வெம்பக்கோட்டை தாலுகா செவல்பட்டி கிராமத்தில் 2 ஆயிரம் வீடுகள் உள்ளன. இங்கு வசிக்கும் மக்கள் பட்டாசு மற்றும் கூலி வேலை பார்த்து வருகின்றனர். செவல்பட்டி கிராம ஊராட்சியில் அம்மையார்பட்டி, கொட்டிமடக்கி பட்டி, செவல்பட்டி கிராமங்கள் உள்ளன. ஊராட்சி நிர்வாக அலுவலகம், ஆரம்ப சுகாதார நிலையம் இங்கு செயல்பட்டு வருகின்றன. செவல்பட்டி கிராமத்தில் வாறுகால் முறையாக அகற்றபடுவதில்லை.

இதனால் கழிவுநீர் வாறுகாலில் தேங்கி தெருக்களில் ஓடுகிறது. மழை பெய்தால் வாறுகால் கழிவு நீர் குளம் போல் வீடுகளுக்கு அருகில் தேங்கிநிற்பதால் சிக்கன்குனியா, டெங்கு காய்ச்சல் பரவும் ஆபத்து உள்ளது. கொட்டிமடக்கி பட்டி சாலையில் உள்ள வாறுகால் தூர் வாரப்படவில்லை. இங்கு குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுகிறது. மகளிர் சுகாதார வளாகம் செயல்பாடின்றி கிடப்பதால் சாலை திறந்தவெளி கழிப்பிடமாக மாறியுள்ளது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்பட்டு நோய் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது.

செவல்பட்டி கிராமத்தைச் சுற்றியுள்ள அம்மையார்பட்டி, கொட்டிமடக்கி பட்டி, குகன்பாறை, அலமேலுமங்கைபுரம், மீனாட்சிபுரம் போன்ற கிராமப்பகுதி மக்களுக்கு மையப்பகுதியாக உள்ளது. இதனால் செவல்பட்டியில் காய்கறி சந்தை, பலசரக்கு கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதனால் இங்கு எப்போதும் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்த கிராமத்தில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படாததால் இங்கு வரும் மக்கள் அவசரத்திற்கு சாலையில் ஒதுங்குவதால் காளியம்மன் கோயில் மெயின் வீதியில் சுகாதாரக்கேடு உண்டாகிறது. எனவே, பல கிராம மக்கள் வந்து செல்லும் செவல்பட்டியில் போதிய அடிப்படை வசதிகள் செய்து தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sevalpatti ,
× RELATED செவல்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம் அரசு...