×

(வேலூர்) ஒடுகத்தூர் வனப்பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகள் சீரமைப்பு


ஒடுகத்தூர், டிச.16: வனப்பகுதிகளில் உள்ல தண்ணீர் தொட்டிகள் சீரமைக்கப்பட்டது. ஒடுகத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் மலைகள் சார்ந்து காடுகள் அதிகளவில் இருப்பதால், அதில் மான், குரங்குகள், யானை, சிறுத்தை போன்ற வனவிலங்குகள் அதிகளவில் உள்ளது. அவ்வாறு காடுகளில் உள்ள விலங்குகள், வெயில் காலங்களில் தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்கு படையெடுக்க தொடங்கி விடுகின்றது. இதனால், விலங்குகள் சாலையை கடக்க முயலும்போது, வாகனங்களில் சிக்கி உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படுகிறது. அதேபோல், குடியிருப்பு பகுதிகளில் நுழையும் விலங்குகளால் பொதுமக்களுக்கு பெரிதும் பாதிப்பு ஏற்படுகிறது. இதனை, தவிர்க்கும் விதமாக தமிழகம் முழுவதும் உள்ள வனப்பகுதிகளில், தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டது.

அவ்வாறு அமைக்கப்பட்ட தண்ணீர் தொட்டிகள், சரிவர பராமரிக்காததால் காலப்போக்கில் சிதிலமடைந்தும், குப்பைகள் கொட்டும் இடமாக மாறியது. தற்போது, கோடை காலம் தொடங்கி இருப்பதால், வனப்பகுதிகளின் பகுதிகளின் அருகே உள்ள தண்ணீர் தொட்டிகள் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. அதன்படி வேப்பங்குப்பம் ஊராட்சிக்கு உட்பட்ட ரங்கப்பன்கொட்டாய், அனந்தபுரம் ஆகிய வனப்பகுதிகளின் அருகே உள்ள தண்ணீர் தொட்டிகள், ஊராட்சி மன்ற தலைவர் சுகன்யா உமாபதி தலைமையில் நேற்று சீரமைக்கப்பட்டது.

Tags : Odugathur forest ,
× RELATED பல ஆண்டுகளுக்கு பிறகு ஒற்றை தந்த யானை நடமாட்டம்