×

ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் இருசக்கர வாகன பேரணி

திருமுருகன்பூண்டி, டிச. 13:  திருப்பூர் வடக்கு ஒன்றிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் நேற்று ‘‘போதை இல்லா திருப்பூரை உருவாக்குவோம், பெண் குழந்தைகளை பாதுகாப்போம்’’ என்ற முழக்கத்தோடு இருசக்கர வாகனப் பேரணி நடந்தது. வடக்கு ஒன்றிய தலைவர் வசந்தி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பவித்ரா தேவி பேரணியை தொடக்கி வைத்து பேசினார்.

வடக்கு ஒன்றிய செயலாளர் பானுமதி, பொருளாளர் மங்கலட்சுமி, கமிட்டி உறுப்பினர்கள் மீனாட்சி, ஜெயக்கொடி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெருப்பெரிச்சல், வாவிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் இருந்து காலை 9 மணிக்கு தொடங்கிய பேரணி தோட்டத்துபாளையம், குருவாயூரப்பன் நகர், சக்தி நகர், பிச்சம்பாளையம் புதூர், ஸ்ரீ நகர், அவிநாசிகவுண்டம்பாளையம், வெங்கமேடு, ஆத்துப்பாளையம், செட்டிபாளையம், நெசவாளர் காலனி, வழியாக பாண்டியன் நகரை மாலை 5 மணிக்கு வந்தடைந்தது.

மாநில செயலாளர் பொன்னுத்தாய் பிரசார பயணத்தை நிறைவு செய்து பேசினார்  இதில் மாவட்ட தலைவர் மைதிலி,  துணைச் செயலாளர் ஷகிலா, வளர்மதி உள்ளிட்ட மாதர் சங்கத்தினர் இருசக்கர வாகனத்தில் பிரச்சார பயணம் மேற்கொண்டனர். முடிவில் துணைத்தலைவர் கற்பகம் நன்றி கூறினார்.

Tags : Democratic Mather Association ,
× RELATED நீர்வளத்துறை அலுவலகத்தில் காலிப்பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு