×

பொன்னை ஆற்றில் பழுதடைந்த பைப் லைன் சீரமைக்கும் பணியை கமிஷனர் ஆய்வு: விரைவில் மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம்

வேலூர், டிச.11: பொன்னை ஆற்றில் உடைந்த பைப் லைன் சீரமைக்கும் பணிகளை கமிஷனர் ஆய்வு செய்தார். விரைவில் பணிகள் முடிந்து மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.  வேலூர் மாநகராட்சி பகுதிகளில் உள்ள மக்களுக்கு காவிரி கூட்டு குடிநீர், பொன்னை ஆற்று நீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், வேலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையின் காரணமாக பாலாற்றில் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு குடிநீர் வழங்கும் குழாய்கள் 30க்கும் மேற்பட்ட இடங்களில் உடைந்துள்ளது. அதேபோல், பொன்னை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் பைப் லைன் உடைந்துள்ளது.

இதனால் குடிநீர் வழங்குவதில் தடை ஏற்பட்டுள்ளது. இதற்கு மாற்று ஏற்பாடாக மாநகராட்சி சார்பில் அந்தந்த மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கிணறுகள், போர்வெல்கள் சீரமைக்கப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில், பொன்னை ஆற்றில் வெள்ள பெருக்கு குறைந்ததை அடுத்து, பழுதடைந்த பைப்லைன் சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இதற்கிடையில், பொன்னை ஆற்றில் பைப்லைன் சீரமைக்கும் பணியை மாநகராட்சி கமிஷனர் அசோக்குமார் நேற்று முன்தினம் நேரில் ஆய்வு செய்து பணிகளை துரிதமாக முடிக்க உத்தரவிட்டார். அப்போது, 2வது மண்டல உதவி ஆணையர் மதிவாணன் உடனிருந்தனர். பழுதடைந்த பைப்லைன் சீரமைக்கும் பணி ஓரிரு நாட்களில் முடிந்து, அடுத்த வாரம் குடிநீர் வினியோகம் செய்யப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Ponnai river ,
× RELATED இன்னைக்கு எதிர்பாங்க… நாளைக்கு கூட...