×

சிலம்ப போட்டியில் அரசு பள்ளி மாணவன் தேசிய அளவில் 2வது இடம்

திருமங்கலம். டிச. 10: கோவாவில் நடந்த தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் கள்ளிக்குடி வெள்ளாகுளம் அரசு பள்ளி மாணவன் ஜெனித் சச்சின் இரண்டாம் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.மதுரை மாவட்டம், கள்ளிக்குடியை சேர்ந்தவர் ஜான்சிபு. எலக்ட்ரீசன். இவரது மகன் ஜெனித் சச்சின்(16). கள்ளிக்குடி அடுத்துள்ள கே.வெள்ளாகுளத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். சிறுவயது முதலே சிலம்பத்தில் ஆர்வமுள்ள மாணவன் ஜெனித் சச்சின் ஆர்வத்தை தெரிந்து கொண்ட பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் பிரபு மாணவனுக்கு ஊக்கம் கொடுத்தார்.

இதனால் மாவட்ட மற்றும் மாநில அளவிலான பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற ஜெனித்சச்சின், மாநில அளவில் மூன்று முறை முதலிடங்களைப் பிடித்து தங்கப்பதக்கத்தை வென்றார். இதே போல் மண்டலம் மற்றும் மாவட்ட அளவிலான போட்டிகளில் 10 தங்கப்பதக்கம், 4 வெள்ளிப்பதக்கங்களையும் வென்றுள்ளார்.இந்த நிலையில் கடந்த மாதம்27 முதல் 29 வரையில் கோவா மாநிலத்தில் நடந்த தேசிய அளவிலான சிலம்ப போட்டியில் மதுரை மாவட்டத்திலிருந்த பங்கேற்ற 12 பேர்களில் கள்ளிக்குடி மாணவன் ஜெனித் சச்சினும் ஒருவர். 17 வயதிற்குட்பட்ட 50 முதல் 60 கிலோ எடைப்பிரிவில் தனித்திறன் சிலம்ப போட்டியில் பங்கேற்ற இவர், தேசிய அளவில் இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்தார். வெற்றி பெற்ற மாணவனை பள்ளி தலைமையாசிரியர் மோகன், உடற்கல்வி ஆசிரியர் பிரபு மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.


Tags : Government School ,Silamba ,
× RELATED அரசு பள்ளி மாணவர்கள் நீட் தேர்வில் 132 பேர் தேர்ச்சி