×

பாலையக்கோட்டை ஊராட்சி துவக்கப்பள்ளி கட்டிடத்தை சீரமைக்க வேண்டும்

மன்னார்குடி, டிச. 5: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கல்வி மாவட்டத்திற்குட்பட்ட திருமக் கோட்டை அடுத்த பாலையக் கோட்டையில் ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி உள்ளது.இப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கூட்டம் கழக தலைவர் தமிழ்ச்செல்வன், பள்ளி தலைமையாசிரியர் ஜோன்ஸ் ஆஸ்டின் ஆகியோர் தலைமையில் பள்ளி வளாகத்தில் நடைப்பெற்றது. கூட்டத்தில், சேதமடைந்த பள்ளிக் கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும். குடிநீர் தொட்டி ஒன்றை புதிதாக அமைத்து மாணவர்களுக்கு பாதுகாக்கப் பட்ட சுத்திகரிக்கப் பட்ட குடிநீர் வழங்க வேண்டும். ஆசிரியர் பணி யிடங்களை சரி செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

Tags : Palayakottai Panchayat ,Primary School building ,
× RELATED ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி கட்டிடம் திறப்பு