×

ஒட்டன்சத்திரத்தில் அமிர்தா எக்ஸ்பிரஸ் நின்று செல்ல வேண்டும் ஒன்றிய ரயில்வே அமைச்சரிடம் திண்டுக்கல் எம்.பி கோரிக்கை

திண்டுக்கல், டிச. 5: ஒட்டன்சத்திரத்தில் அமிர்தா எக்ஸ்பிரஸ் ரயில் நின்று செல்ல வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை ஒன்றிய ரயில்வே அமைச்சரிடம் திண்டுக்கல் திமுக எம்பி வேலுச்சாமி கோரிக்கை வைத்துள்ளார்.டெல்லியில் நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்க சென்றுள்ள திண்டுக்கல எம்.பி வேலுச்சாமி, ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவை நேரில் சந்தித்து மனு அளித்தார். அதில் கூறியிருப்பதாவது: ஒட்டன்சத்திரத்தில் அமிர்தா விரைவு ரயில் நின்று செல்ல வேண்டும். இதற்கு ஏற்கனவே மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டதை விரைவில் அமல்படுத்த வேண்டும்.

ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள சத்திரப்பட்டி, ஆயக்குடி மற்றும் தாழையூத்து ஆகிய இடங்களில் உள்ள ரயில்வே கிராசிங்களில் பாலம்

அமைக்க வேண்டும். பழனியில் இருந்து ஈரோடு வரை (தாராபுரம் வழியாக) புதிய அகல ரயில்பாதை அமைக்க வேண்டும்.திண்டுக்கல் - பழனி - பொள்ளாச்சி - பாலக்காடு ரயில் பாதையில் நடைபெற்று வருகிறது. ரயில்வே மின்மயமாக்கல் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். பயணிகளின் நலன் கருதி சென்னை - பாலக்காடு - கோயம்புத்தூர் செல்லும் ரயிலில் உள்ள பழைய பெட்டிகளுக்கு பதிலாக புதிய நவீன பெட்டிகள் அமைக்க வேண்டும்.

பொள்ளாச்சி, பழனி, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் வழியாக கோவையில் இருந்து சென்னைக்கு தனி ரயில் இயக்க வேண்டும். சென்னை எக்ஸ்பிரஸ், குருவாயூர் சென்னை எக்ஸ்பிரஸ், முத்துநகர் எக்ஸ்பிரஸ் ஆகிய ரயில்கள் கொடை ரோடு ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும். ரயில்வே துறையால் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதையில் மழைக்காலத்தில் நீர் தேங்கி நிற்கிறது. மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதால் இதற்கு தீர்வு காணும் விதமாக அனைத்து சுரங்க பாதைகளிலும் நிரந்தர பம்ப் ஸ்டேஷன் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவர் அளித்துள்ளார்.

Tags : Dindigul ,Union Railway ,Minister ,Amrita Express ,Ottanchattaram ,
× RELATED அப்பப்பா…அனல் காத்து வீசுது...