வேலூர் அருகே பயங்கரம்: கை, கால்களை கட்டி பாழடைந்த கிணற்றில் தள்ளி வாலிபர் கொலை; கள்ளக்காதல் விவகாரமா?

வேலூர், ஏப்.12: வேலூர் அருகே கை, கால்களை கட்டி பாழடைந்த கிணற்றில் தள்ளி வாலிபரை கொலை செய்தவர்களை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் அடுத்த சித்தேரியில் பாழடைந்த விவசாய கிணறு உள்ளது. இவ்வழியாக நேற்று முன்தினம் மாலை சென்றவர்கள், கிணற்றில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அருகில் சென்று பார்த்தனர். அப்போது கிணற்றில் ஒரு சடலம் மிதந்து கொண்டிருந்தது. இதுதொடர்பாக அரியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் வேலூர் தீயணைப்பு நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு விரைந்து சென்ற அரியூர் போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் இணைந்து பொதுமக்கள் உதவியுடன் கிணற்றில் இருந்து நேற்று முன்தினம் இரவு சடலத்தை மீட்டனர். இறந்து கிடந்தவருக்கு சுமார் 40 வயது இருக்கும். மேலும் சடலத்தின் கை, கால்கள் கட்டி இருந்ததால் ெகாலை செய்யப்பட்டிருப்பதை ேபாலீசார் உறுதி செய்து கொண்டனர். சடலம் அழுகிய நிலையில் இருந்ததால் இறந்து 4 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கும் என்று தெரிகிறது. தொடர்ந்து அரியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சடலமாக கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்தும் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை சம்பவம் அரங்கேறியதா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

இதுகுறித்து போலீசார் கூறியதாவது: கிணற்றில் சடலமாக கிடந்த நபரின் கை, கால்கள் கட்டப்பட்டு இருந்தது. இதனால் அவர் கொலை செய்யப்பட்டு இருப்பது உறுதியானது. கை, கால்களை கட்டி அடித்துக்ெகான்று சடலத்தை கொண்டு வந்து கிணற்றில் வீசினார்களா? அல்லது கிணற்றில் தள்ளி கொலை செய்தார்களா? என்பது குறித்து பிரேத பரிசோதனைக்கு பிறகுதான் தெரியவரும். கொலையானவருக்கு சுமார் 40 வயது இருக்கும் என்று தெரிகிறது. இதனால் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும் இறந்த நபர் யார்? என்பது குறித்தும் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக காணாமல் போனதாக காவல்நிலையங்களில் கடந்த 4 நாட்களில் பதிவான வழக்கு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் அப்பகுதிக்கு செல்லும் வழியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. விரைவில் ெகாலையாளிகள் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories:

>