×

திருவண்ணாமலை, வேட்டவலம், ஆவூரில் 1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு திரளான பக்தர்கள் பங்கேற்பு

வேட்டவலம், ஏப்.10: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், வேட்டவலம், ஆவூரில் 1000 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில்களில் பிரதோஷ சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியை தரிசனம் செய்தனர்.திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில், வேட்டவலம் மற்றும் ஆவூரில் ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த அறம் வளர்த்த நாயகி உடனுறை அகத்தீஸ்வரர் சிவன் கோயில்களில் பங்குனி மாத தேய்பிறை பிரதோஷ சிறப்பு வழிபாடு நேற்று நடந்தது.
இதையொட்டி அண்ணாமலையார் கோயிலில் பெரிய நந்தி பகவானுக்கும், மூலவர் அகத்தீஸ்வரர், அறம் வளர்த்த நாயகி அம்மன் மற்றும் கோயிலின் பிரதான நந்திக்கு பால், பன்னீர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

தொடர்ந்து வில்வம், அருகம்புல், பூ அகியவற்றை கொண்டு சுவாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் கோயிலின் உள் பிரகாரத்தில் காமதேனு வாகனத்தில் பிரதோஷநாதர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் சமூக இடைவெளியுடன் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பிரதோஷ வழிபாட்டில் பெரிய நந்தி பகவானுக்கு சந்தன அபிஷேகம் நேற்று நடந்தது. அடுத்தபடம்: தங்க ரிஷப வாகனத்தில் கோயில் 3ம் பிரகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்த பிரதோஷநாதர். கடைசிபடம்: வேட்டவலம் அகத்தீஸ்வரர் கோயிலில் நேற்று பங்குனி மாத தேய்பிறை பிரதோஷ சிறப்பு வழிபாட்டில் கோயிலின் பிரதான நந்திக்கு சிறப்பு பாலபிஷேகம் நடந்தது.

Tags : Shiva ,Thiruvannamalai ,Vettavalam and ,Aur ,
× RELATED 16ம் நூற்றாண்டை சேர்ந்த சிவகாசி சிவன்...