×

6 இலவச சிலிண்டர் கிடைக்க அதிமுகவுக்கு வாக்களியுங்கள் வேட்பாளர் பாலசுப்பிரமணியன் பிரசாரம்

சேலம், ஏப்.3: ஆண்டுக்கு 6 இலவச காஸ் சிலிண்டர்கள் கிடைக்க அதிமுகவுக்கு வாக்களியுங்கள் என தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் பாலசுப்ரமணியன் பிரசாரம் செய்தார். சேலம் தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் பாலசுப்பிரமணியன், தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.  வீதி வீதியாக செல்லும் அவர், தமிழக அரசின் சாதனைகளை சொல்லி வாக்கு சேகரித்து வருகிறார். பெண்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். அப்போது வேட்பாளர் பாலசுப்பிரமணியன் பேசுகையில், ‘தொகுதியில் பாதிப்படைந்துள்ள ரோடு வசதி, சாக்கடை வசதியை உடனடியாக செய்து கொடுப்பேன். நீங்கள் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடிவருவேன். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். சேலத்திற்கு மேம்பாலங்களை கட்டிக் கொடுத்துள்ளார். இதனால் போக்குவரத்து நெரிசல் முற்றிலும் குறைந்துவிட்டது. எனவே, அவரது கரத்தை நாம் வலுப்படுத்தவேண்டும். அதிமுக தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல, ஒவ்வொரு குடும்ப அட்டை தாரர்களுக்கும் மாதம் தோறும் ₹1500 வழங்கப்படும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஆண்டுக்கு 6 விலையில்லா சிலிண்டர் வழங்கப்படும். மாணவ, மாணவிகளுக்கு கல்வி கடன் தள்ளுபடி, திருமண தம்பதிகளுக்கு அம்மா சீர்வரிசை திட்டம் உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் வழங்கப்படும். எனவே, எனக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்’ என்றார்.

Tags : AIADMK ,Candidate ,Balasubramanian ,
× RELATED புதுக்கோட்டை அருகே தொடர் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட முன்னாள் விஏஓ கைது..!!