பனியன் தொழிலாளியை தாக்கிய 4 பேர் கைது

திருப்பூர், ஏப். 2: திருப்பூர் கொங்கு மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் அன்பரசன் (34). இவர் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பணி முடித்து செல்லும்போது கொங்கு மெயின் ரோடு ரங்கநாதபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் அன்பரசுக்கும், முருகன் என்பவரின் தரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  வாக்குவாதம் மோதலாக மாறி அன்பரசனை, அதே பகுதியை சேர்ந்த முருகன் (33), ஜெகன் (29), நாகராஜ் (30), ஐயப்பன் (எ) ராஜ் (31) ஆகியோர் சேர்ந்து சரமாரியாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.காயமடைந்த அன்பரசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து அன்பரசனின் புகாரின் பேரில் வடக்கு போலீசார் முருகன், ஜெகன், நாகராஜ், ஐயப்பன் (எ) ராஜ் ஆகிய 4 பேரையும் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Related Stories:

More