×

திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல்,டீசல் விலை குறைக்கப்படும் திமுக வேட்பாளர் சின்னம்மாள் உறுதி

மதுரை, ஏப்.1: திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைக்கப்படும். கேஸ் சிலிண்டருக்கு மானியம் ரூ.100 வழங்கப்படும் என்று மேற்கு தொகுதிக்குட்பட்ட பசுமலையில் திமுக தேர்தல் அறிக்கையை தெரிவித்து, வேட்பாளர் சின்னம்மாள் வாக்குகள் சேகரித்தார்.
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிடும் சின்னம்மாள், தொகுதி முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இவர் நேற்று பசுமலை, பைகாரா உள்ளிட்ட பகுதிகளில் வாக்குகள் சேகரித்தார். அப்போது பேசுகையில், ‘‘திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் டீசல் விலை 5 ரூபாய் குறைக்கப்படும், கேஸ் சிலிண்டருக்கு மானியம் நூறு ரூபாய் வழங்கப்படும். குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.ஆயிரம் வழங்கப்படும்.

நிலமற்றவர்களுக்கு ஏழை, எளிய மக்களுக்கு அரசின் வீட்டுமனை பட்டா பெற்றுத் தரப்படும். சாலை வசதி செய்து தரப்படும். சிறிய தெருக்களையும் விட்டு விடாமல் அங்கும் பேவர்பிளாக் சாலை அமைத்து தருவேன். என்று வாக்குறுதி அளித்தார். திமுக தேர்தல் அறிக்கையை வைத்து, ஒவ்வொரு அறிவிப்பின் நன்மைகளையும் விளக்கிப் பேசினார்.இவர் சென்ற இடங்களிலெல்லாம் பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர். பிரச்சாரத்தின் போது மேற்கு தொகுதி திமுக தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் மேயர் குழந்தைவேலு, மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர் ஜெயராமன் மற்றும் கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags : DMK ,Chinnammal ,
× RELATED தேர்தல் வெற்றியை திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்