×

கொல்கத்தா தப்ப முயன்ற கொரோனா நோயாளி சிக்கினார்

சென்னை: சென்னையிலிருந்து மும்பை வழியாக கொல்கத்தா செல்லும் ஏர் இந்தியா விமானம் நேற்று மாலை 3.55 மணிக்கு சென்னை  உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட தயாரானது. அதில் 64 பேர் பயணம் செய்ய வந்திருந்தனர். அப்போது சென்னை விமான நிலைய மருத்துவ குழுவினருக்கு, சென்னை மாநகராட்சி மருத்துவ குழுவினரிடமிருந்து ஒரு அவசர செல்போன் அழைப்பு வந்தது. அதில் ஏர்இந்தியா விமானத்தில் மும்பை வழியாக கொல்கத்தா செல்ல டான் ரவுனக் (21) என்ற தனியார் கல்லூரி மாணவர் வந்துள்ளார். அவருக்கு கொரோனா பாசிட்டிவ்.  அவரது பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கூறினர்.  

இதையடுத்து விமான நிலைய மருத்துவக் குழுவினரும், ஏர் இந்தியா ஊழியர்களும் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். அந்த கல்லூரி மாணவர் விமானத்தில் ஏறுவதற்கு முன்னதாக விமான நிலைய வாசலில் தடுத்து நிறுத்தினர். ஆனால் அந்த மாணவர் நான் கொல்கத்தா சென்று சிகிச்சை பெற்றுக் கொள்கிறேன் என்று கூறி, பயணத்தை தொடர முயன்றார். ஆனால் விமான நிலைய அதிகாரிகள் வலுக்கட்டாயமாக அவருடைய பயணத்தை ரத்து செய்தனர். அதோடு விமானத்தில் ஏற்றப்பட்டிருந்த அவருடைய லக்கேஜ்களும் கீழே இறக்கப்பட்டன. அதன்பின்பு  ஏர்இந்தியா விமானம் 20 நிமிடங்கள் தாமதமாக 63 பயணிகளுடன் மாலை 4.20 மணிக்கு மும்பை புறப்பட்டு சென்றது. அதன்பின்பு கொரோனா நோயாளியான கல்லூரி மாணவருக்கு பாதுகாப்பு கவச உடைகள் அணிவித்து, கொரோனா வைரஸ் பாதிப்பு நோயாளிகளுக்கான சிறப்பு ஆம்புலன்ஸ்சில் ஏற்றி சென்னை கிண்டியில் உள்ள கிங்ஸ் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். விமான நிலைய ஊழியர்கள் ெமத்தனமாக செயல்பட்டதால் தான் கொரோனா நோயாளி சட்டத்தின் ஓட்டைகளை பயன்படுத்தி தப்ப முயன்றுள்ளார்.

Tags : Kolkata ,
× RELATED வெடிகுண்டு மிரட்டலை அடுத்து சென்னை...