வேலூர் மாவட்ட அரசு அலுவலகங்கள் சுவற்றில் கட்சி சின்னங்கள் வரைந்தது உட்பட 86 வழக்குகள் பதிவு காவல்துறை நடவடிக்கை

வேலூர், மாரச் 30: வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலக சுவற்றில் கட்சி சின்னங்கள் வரைந்தது உட்பட 86 வழக்குகள் காவல்துறை மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் விதிமுறைகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட சட்டமன்ற தொகுதியைச் சேர்ந்த தேர்தல் அலுவலர்கள் அளிக்கும் புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து வருகின்றனர்.

அதன்பேரில், வேலூர் மாவட்டத்தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட அரசு அலுவலக சுவற்றில் கட்சி சின்னங்கள் வரைந்தது. தேர்தல் பிரச்சாரத்தின் போது 5 வாகனங்களுக்கு பதிலாக அதிக வாகனங்கள் பயன்படுத்தியது. சமூக இடைவெளி பின்பற்றாதது, மாஸ்க் அணியாதது உள்ளிட்ட 86 வழக்குகள் காவல்துறை மூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் பிரிவு காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories:

>