×

நவீன வசதிகளுடன் மருத்துவமனை அமமுக வேட்பாளர் கோமல் அன்பரசன் உறுதி

மயிலாடுதுறை, மார்ச் 30: மயிலாடுதுறை தொகுதியில் அமமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கோமல் அன்பரசன், மயிலாடுதுறை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மயிலாடுதுறை கடந்த 50 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டுள்ளது குறித்து பொதுமக்களிடம் எடுத்துக் கூறினார். 50 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்ட மயிலாடுதுறையை மீண்டும் சீரமைத்து புதுப்பொலிவுடன் கொண்டுவர வேண்டியது இளைஞர்களின் கையில்தான் உள்ளது. மயிலாடுதுறையில் நவீன மருத்துவக்கல்லூரி  அமைக்கப்படும் என்றார். மயிலாடுதுறை சுற்றுப்பகுதிகளில் உள்ள நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தன்னெழுச்சியாக திரண்டு வந்து ஆதரவளித்து, வாக்கு சேகரித்து வருகின்றனர்.

Tags : Komal Anparasan ,
× RELATED மயிலாடுதுறை தொகுதி அமமுக வேட்பாளர்...