×

திருப்பூர் தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளர் செல்வராஜ் வீதி, வீதியாக வாக்கு சேகரிப்பு

திருப்பூர், மார்ச் 26: திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செல்வராஜ் நேற்று, இந்திரா நகர் மெயின் வீதி, ரேசன் கடை, ராஜீவ்காந்தி நகர், பண்ணாரியம்மன் நகர், பாரதி நகர், என்.பி.நகர், சானார் தோட்டம், பூமா மில்ஸ் வீதி, பிள்ளையார் கோவில் வீதி, பள்ளி வாசல் கார்னர், காவ்யா பேன்சி வீதி, மாரியம்மன் கோவில் வீதி, சுப்ரமணிய நகர் மெயின் வீதி, நாராயணசாமி நகர், காளியப்பா நகர், சேரன் நகர், ராக்கியாபாளையம், வள்ளியம்மை நகர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது திமுகவின் தேர்தல் அறிக்கைகளை எடுத்துக் கூறினார். மேலும் திருப்பூரில் உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த தனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிப்பெற செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பொதுமக்கள் கூறுகையில், ‘‘நீங்கள் (செல்வராஜ்) மேயராக இருந்தபோது 3 நாட்களுக்கு ஒருமுறை வந்த குடிநீர் தற்போது 10 நாட்களுக்கு ஒருமுறை தான் வருகிறது. சில நேரங்களில் லாரி தண்ணீரை வாங்கி பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. இதுபோக மாதக்கணக்கில் அகற்றப்படாத குப்பைகளால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு, தொற்று நோய் பரவி வருகிறது. இதுகுறித்து, பலமுறை மனுகொடுத்தும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை’’ என்றனர்.  இதற்கு பதிலளித்த செல்வராஜ், ‘‘உங்களின் பிரச்னைகள் அனைத்தையும் தீர்க்கும் வகையிலும், வாழ்க்கை தரம் உயரும் வகையிலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏராளமான திட்டங்களுடன் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார். இந்த திட்டங்கள் அனைத்தையும் திமுக நிச்சயம் நிறைவேற்றும். குடிநீர் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணப்படும்’’ என்றார்.

முன்னதாக வேட்பாளர் செல்வராஜிக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், மாலை அணிவித்தும் சிறப்பான வரவேற்பு அளித்தனர். இதில் திமுக மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.  ராயபுரத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தன்னார்வ அமைப்பினரை சந்தித்து ஆதரவு கோரினார். அப்போது, அவர்களின் சமூக பணி குறித்து கேட்டறிந்த அவர், ‘‘திமுக எப்போதும் சமூக ஆர்வலர்களின் பணிக்கு உறுதுணையாக இருக்கும். திமுக ஆட்சிக்கு வந்ததும் தேவையான உதவிகள் செய்யப்படும்’’ என அவர்களிடம் உறுதியளித்தார்.

Tags : DMK ,Selvaraj Veedi ,Tirupur South ,
× RELATED திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம்