×

பூதலூரில் மீன்பண்ணையில் துப்பாக்கி பதுக்கி வைத்தவர்

தஞ்சை, மார்ச் 26: திருச்சி சுப்பிரமணியபுரம் டாக்டர் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மரியஜெனிப்(56), இவரது பூர்வீகம் பூதலூர் அருகே சோளகம்பட்டியாகும். சோளகம்பட்டி ரயில் நிலையம் அருகே மரியஜெனிப்புக்கு சொந்தமான இடத்தில் மீன் பண்ணை அமைத்துள்ளார். அங்கு தங்கி செல்ல ஒரு குடிசை வீடும் கட்டியுள்ளார். இந்நிலையில் பூதலூர் போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி, நேற்று போலீசார் அந்த குடிசை வீட்டுக்கு சென்று அங்கு பதுக்கி வைத்திருந்த எஸ்பிஎம்எல் ரக துப்பாக்கியை பறிமுதல் செய்து, மரியஜெனிப்பை கைது செய்தனர். மேலும், இந்த துப்பாக்கிக்கு உரிய அனுமதி பெற்றுள்ளரா எனவும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாவட்ட தேர்தல் அலுவலர் துவக்கி வைத்தார்

Tags : Bhutalur ,
× RELATED பூதலூர் அருகே பொன்னேர் பூட்டி, வயலை...