ஒரே நாளில் 37 கிராமங்களில் செங்குட்டுவன் எம்எல்ஏ பிரசாரம்

கிருஷ்ணகிரி, மார்ச் 26:  கிருஷ்ணகிரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் செங்குட்டுவன் எம்எல்ஏ., நேற்று கிருஷ்ணகிரி மேற்கு ஒன்றியத்திற்குட்பட்ட காமராஜ் நகர், பனந்தோப்பு, துறிஞ்சிப்பட்டி, தின்னகழனி, பூதிப்பட்டி, மாதேப்பட்டி, எஸ்.மோட்டூர், செம்படமுத்தூர், எண்ணேகொல்புதூர், பாலிகானூர், மிட்டப்பள்ளி, தொட்டபூவத்தி, குருதொட்டனூர், மூங்கில்பட்டி, சிக்கபூவத்தி, வெப்பாலம்பட்டி, வெலகலஅள்ளி, கொடுகூர், மோரமடுகு உள்ளிட்ட 37 கிராமங்களுக்கு சென்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவருக்கு பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், மாலை அணிவித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் பேசுகையில், ‘திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது தேர்தல் அறிக்கையில், வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள குடும்பங்களை சார்ந்த கிராமப்புற பெண்களுக்கு கால்நடைகள் வளர்ப்பு, மீன் பிடித்தல், வண்ண மீன் வளர்ப்பு, மண் பானைகள் செய்தல் போன்ற விவசாயம் சார்ந்த சிறிய தொழில்கள் மற்றும் வணிகம் செய்தவற்கு வட்டியில்லா கடனாக ₹50 ஆயிரம் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகளை அறிவித்துள்ளார். இவை அனைத்து மகளிருக்கும் கிடைக்க உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்,’ என்றார். இந்நிகழ்ச்சியில், கோவிந்தசாமி மற்றும் வெங்கட்டப்பன், சந்திரசேகர், வாசுதேவன், செந்தில்குமார், வேல்மணி, பழனி, சவுந்தர்ராஜன், தமிழ்செல்வன், குமார், கதிரவன், வெங்கடேசன், யுவராஜ், முருகேசன், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories:

>