பேப்பர் ரோல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே

வேலூர், மார்ச் 26: வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே பேப்பர் ரோல் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளனது.கோவை மாவட்டத்தில் இருந்து பேப்பர் லோடு ஏற்றிக்கொண்டு ஆந்திர மாநிலம் குண்டூர் நோக்கி நேற்று முன்தினம் இரவு லாரி புறப்பட்டது. லாரியை புகழேந்தி ஓட்டி வந்தார். நேற்று அதிகாலை வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே வளைவில் லாரியை திருப்பியபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் குறுக்கே கவிழ்ந்து விபத்துக்குள்ளனாது.

இதனால் அவ்வழியாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதில் டிரைவர் புகழேந்தி காயமின்றி தப்பினார். இதுகுறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விபத்துக்குள்ளான லாரியை மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

Related Stories:

>