×

மதுரை மேற்கு தொகுதியில் அப்பள தொழிலை பாதுகாக்க நடவடிக்கை திமுக வேட்பாளர் சின்னம்மாள் உறுதி

மதுரை, மார்ச் 26: மதுரை மேற்கு தொகுதியில் அப்பள தொழிலை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என திமுக வேட்பாளர் சின்னம்மாள் வாக்குறுதி அளித்து பிரசாரம் செய்தார்.மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் சின்னம்மாள் போட்டியிடுகிறார். இவர் நேற்று காலை ஜெய்ஹிந்த்புரம், ராமையா தெரு, ஜீவா நகர் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். அவர் சென்ற இடங்கள் எல்லாம் பெண்கள் மலர் தூவி, ஆரத்தி எடுத்து மகிழ்ச்சி பொங்க வரவேற்றனர்.மக்கள் மத்தியில் சின்னம்மாள் பேசுகையில், ‘உங்கள் வரவேற்பை பார்க்கும் போது திமுக வெற்றி நிச்சயம் என உறுதியாகி விட்டது. இப்பகுதியில் பாதாள சாக்கடை திட்டத்தை முழுயளவில் நிறைவேற்றுவேன். குடிநீரில் அடிக்கடி சாக்கடை கலப்பதாக புகார்கள் வருகின்றன. அதை தீர்க்க நடவடிக்கை எடுப்பேன்.

சாலை வசதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். உங்களில் ஒருவராக, உங்கள் குறைகளை தீர்க்க முழுவீச்சில் பாடுபடுவேன். இப்பகுதியில் வசிக்கும் அப்பள தொழிலாளர்களுக்கான கூலி உயர்வு, பருப்பு விலையை குறைக்க நடவடிக்கை எடுப்பேன்’ என்றார். பிரசாரத்தில் மேற்கு தொகுதி தேர்தல் பொறுப்பாளர் முன்னாள் மேயர் குழந்தைவேலு, பொறுப்புக்குழு உறுப்பினர் ஜெயராமன், பகுதி செயலாளர் முருகானந்தம் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Tags : DMK ,Chinnammal ,Madurai West ,
× RELATED தேர்தல் வெற்றியை திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்