×

திமுக ஆட்சி அமைந்ததும் எல்.வி.புரம் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டித்தரப்படும்

திருவள்ளூர், மார்ச் 24: திருவள்ளூர் சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் வி.ஜி.ராஜேந்திரன் திருவாலங்காடு ஒன்றியத்தில் கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் ச.மகாலிங்கம் தலைமையில் கிராமம், கிராமமாக சென்று உதயசூரியன் சின்னத்திற்கு தீவிரமாக வாக்கு சேகரித்தார். அப்போது, பொதுமக்கள் திரண்டு வந்து திருஷ்டி பூசணிக்காய், சூரத்தேங்காய் உடைத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது அவர் பேசியதாவது, “திருவாலங்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 30 படுக்கை வசதிகள், கிராமங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சாலை வசதி, பள்ளி கட்டிடம், ஆழ்துளை கிணறு, சமுதாய கூடங்கள் ஆகியவற்றை அமைத்து தந்துள்ளேன். ஏற்கனவே சட்டசபையில் எல்.வி.புரத்தில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டி தரவேண்டும் என்று பேசியுள்ளேன். திமுக ஆட்சி அமைந்ததும்  கண்டிப்பாக தரைப்பாலம் கட்டி தரப்படும்.

மேலும், நிலத்தடி நீரை பாதுகாக்க கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி தரப்படும். விவசாயத்திற்கு மும்முனை இலவச மின்சாரம் வழங்கப்படும். பாகசாலையில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைத்து தர நடவடிக்கை எடுக்கப்படும். பாகசாலை, சின்னமண்டலி, எல்.வி.புரம், பொன்னாங்குளம், ஒரத்தூர் ஆகிய பகுதிகளுக்கு நெல்கொள்முதல் நிலையம் அமைத்து தரப்படும். கூவம் ஏரியிலிருந்து பிளாஷ் தோட்டம் வழியாக கூவம் ஆறுவரை சேதமடைந்துள்ள கலங்கள் கால்வாயை தூர்வாரி சீரமைத்த தரப்படும்,”  இவ்வாறு அவர் பேசினார். வாக்கு சேகரிப்பில் காங்கிரஸ் நிர்வாகிகள் ஏகாட்டூர் ஆனந்தன், பி.ரமேஷ், முகுந்தன், ராமன், விசிக நிர்வாகி வெங்கடேசன், திமுக மாவட்ட பொறுப்புக் குழு உறுப்பினர்கள் களாம்பாக்கம் எம்.பன்னீர்செல்வம், சரஸ்வதி சந்திரசேகர், ஒன்றியக்குழு துணைத்தலைவர் சுஜாதா மகாலிங்கம், ஒன்றிய நிர்வாகிகள் எம்.ரமேஷ், த.ஜீவன், வி.மனோகரன், சாந்தி பன்னீர்செல்வம், எஸ்.பி.நூருல்லா, சி.ஜெயபாரதி, டி.தினகரன், பி.ஜெகதீசன், ஏ.பி.செந்தில்குமார், நந்தகுமார், காஞ்சிப்பாடி பி.சரவணன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், திமுக செயலாளர்கள், பிரதிநிதிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Tags : DMK ,LV Puram Kosasthalai river ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளர்கள் ஆலோசனை கூட்டம்