×

தொண்டியில் பஸ் டெப்போ மு.க.ஸ்டாலின் வாக்குறுதி பொதுமக்கள் வரவேற்பு

தொண்டி, மார்ச் 24:  ராமநாதபுரத்தில் நேற்று முன்தினம் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசுகையில், திமுக ஆட்சிக்கு வந்தால், தொண்டியில் பஸ் டிப்போ அமைக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதனை இப்பகுதி மக்கள் வரவேற்றனர். தொண்டி பகுதி மக்கள் போக்குவரத்து பணிமனை அமைக்க வேண்டும் என்று நீண்டநாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த காலங்களில் அதிமுக ஆட்சியில் இதற்கு நடவடிக்கை எடுக்க கோரி பல்வேறு இயக்கம் மற்றும் சமுதாயத்தின் சார்பில் பல முறை கோரிக்கை விடப்பட்டது. ஒவ்வொறு முறையும் ஏதாவது காரணம் கூறி இப்பகுதியில் பணிமனை அமைவதை தவிர்த்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் ராமநாதபுரத்தில் நடைபெற்ற வேட்பாளர் ஆதரவு கூட்டத்தில் தொண்டியில் பணிமனை அமைக்கப்படும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்தது இப்பகுதி மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

இது குறித்து தமுமுக மாவட்ட செயலாளர் ஜிப்ரி கூறியது, இரவு நேரத்தில் போதிய போக்குவரத்து வசதி இல்லாததால் திருவாடானையில் இருந்து தொண்டி வர முடியாமல் தவித்து வருகின்றனர். அதனால் தொண்டியில் போக்குவரத்து பணிமனை அமைக்க கோரி பலமுறை கோரிக்கை விடுத்தும் கடந்த அதிமுக ஆட்சியில் எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. தற்போது திமுக தலைவர் விடுத்துள்ள அறிக்கை மகிழ்ச்சியை அளிக்கிறது என்றார்.

Tags : Tondi ,MK Stalin ,
× RELATED இதுவரை எடுத்த நடவடிக்கைகளைவிட...