×

மண்ணச்சநல்லூர் அதிமுக வேட்பாளர் பரஞ்சோதி உறுதி கொரோனா வேகமாக பரவுவதால் திருச்சியில் மீண்டும் ஊரடங்கா?

திருச்சி, மார்ச் 23: தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடக்கிறது. இதில் 100 சதவீதம் வாக்களிக்க வலியுறுத்தி இந்தியன் ஓவர்சீஸ் வங்கி மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் திருச்சி தலைமை தபால் அருகே உள்ள ஐஓபி வங்கியில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் கலெக்டருமான சிவராசு, வாகனங்களில் தேர்தல் விழிப்புணர்வு வில்லைகளை ஒட்டினார். பின்னர் கலெக்டர் சிவராசு கூறியதாவது: தமிழகத்திலும் கொரோனா வேகமாக பரவி வருகிறது. திருச்சியை பொருத்தவரை கடந்த வாரம் நாள்தோறும் 12, 13 என இருந்த தொற்று எண்ணிக்கை தற்போது நாள்தோறும் 20ஆக உயர்ந்துள்ளது.

இதே நிலை நீடித்தால் மக்கள் மிகவும் பாதிக்கப்படுவர். கடந்தாண்டு மார்ச், ஏப்ரல், மே ஆகிய மூன்று மாதங்கள் எப்படி பின்பற்றினோமோ, அதேபோல் வரும் 3 மாதங்கள் கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். இல்லையென்றால் கடுமையாக பாதிக்கப்படுவோம். பிரசாரத்தில் ஈடுபடக்கூடிய அரசியல் கட்சியினர், வேட்பாளர்கள் முககவசம் அணியவில்லை என்றால் அபராதம் விதிக்கப்படும். வழக்குப்பதிவு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Mannachanallur ,AIADMK ,Paranjothi ,Trichy ,
× RELATED திருச்சி அருகே பயங்கரம் காதலை ஏற்க மறுத்த பெண் கொடூர கொலை: வாலிபர் கைது