×

ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையா கருங்குளம் யூனியனில் பிரசாரம்

ஓட்டப்பிடாரம், மார்ச் 21: ஓட்டப்பிடாரம் தொகுதி திமுக வேட்பாளர் சண்முகையா, கருங்குளம் யூனியனுக்கு உட்பட்ட கிராமங்களில்  தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.  ஓட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகையா நேற்று கருங்குளம் யூனியனுக்கு உட்பட்ட கலியாவூர், உழக்குடி, காலாங்கரை, சின்ன கலியாவூர், கோனார்குளம், விளாத்திகுளம், ஈச்சந்தாவோடை உள்ளிட்ட அப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் வாக்காளர்களை சந்தித்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும்  அவர், அப்பகுதிகளில் வீடுவீடாக. சென்று குறைகள் கேட்டு அவற்றை நிவர்த்தி செய்வதாக உறுதி அளித்தார்.   அப்போது வாக்காளர்களிடையே அவர் பேசுகையில், ‘நான் வெற்றி பெற்றதும் தடையில்லாமல் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் அனைத்து கிராமங்களுக்கும் ஒரே சீராக கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்க தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுப்பேன். கிராமங்களில் சாலை வசதி, பஸ் வசதி உள்ளிட்ட அடிப்படை தேவைகளை அறிந்து சட்டமன்றத்தில் குரல் கொடுத்து அவற்றை நிறைவேற்ற நிச்சயம் நடவடிக்கை எடுப்பேன். மேலும் திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள அனைத்து திட்டங்களும் மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்வேன் என்றார். வேட்பாளருடன் கருங்குளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சுரேஷ் காந்தி, கிளை செயலாளர் வேல்மயில், மாவட்ட பிரதிநிதி செந்தூர் பாண்டி, பொறியாளர் அணி மணிகண்டன், பஞ்சாயத்து தலைவர் கொடியங்குளம் அருண்குமார், ஒன்றிய நிர்வாகிகள் பட்டுராஜ், செல்வராஜ், கலியாவூர் பஞ். தலைவர் சின்னசாமி உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் சார்பு அணியினர் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags : DMK ,Shanmugaiya ,Karungulam ,
× RELATED விழுப்புரம் மாவட்ட திமுக நிர்வாகிகள்...