×

முத்தூர் ஒழுங்குமுறை கூடத்தில் ரூ.98 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்

வெள்ளக்கோவில், மார்ச் 21:  முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.98 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம் நடைபெற்றது. வெள்ளக்கோவில் அடுத்துள்ள முத்தூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நேற்று தேங்காய் ஏலம் நடைபெற்றது. முத்தூர் சுற்று வட்டார விவசாயிகள் 47  பேர், 6616 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வந்தனர். ஏலத்தில் முதல் தரம் ஒரு கிலோ 43.10 ரூபாய்க்கும், இரண்டாம் தரம் ஒரு கிலோ 33.15 ரூபாய்க்கும், சராசரி 40.15   ரூபாய்க்கும் ஏலம் போனது. 2.4  டன் தேங்காய்கள் மொத்தம் 98 ஆயிரத்துக்கு ஏலம் போனது இதே போல் நடந்த கொப்பரை ஏலத்திற்கு 4263 கிலோ தேங்காய் பருப்பு வந்தது. அவை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.133  ரூபாய்க்கும், குறைந்த பட்சமாக ரூ.90க்கும் ஏலம் போனது. மொத்தம் 4263  கிலோ கொப்பரை, 5லட்சத்து 33 ஆயிரத்துக்கு வர்த்தகம் நடந்தது. 68 விவசாயிகள் பங்கேற்றனர் என விற்பனைக்கூட கண்காணிப்பாளர் ரங்கன் தெரிவித்தார்.

Tags : Muttur Regulatory Hall ,
× RELATED முத்தூர் ஒழுங்குமுறை கூடத்தில் ரூ.88 ஆயிரத்துக்கு தேங்காய் ஏலம்