×

செங்கல்பட்டு தொகுதி அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் தீவிர வாக்கு சேகரிப்பு: கூட்டணி கட்சியினர் ஏராளமானோர் பங்கேற்பு

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் மறைமலைநகர் நகராட்சியில் தீவிர வாக்கு சேகரித்தார். இதில் கூட்டணி கட்சியினர் திரளாக பங்கேற்றனர். சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டம்,  மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட  21 வார்டுகளிலும் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் கஜா என்கிற கஜேந்திரன் நேற்று காலை முதல் இரவு வரை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, பொதுமக்கள் அவருக்கு சிறப்பான  வரவேற்பு அளித்தனர்.
இதற்கு அதிமுக நகர செயலாளர் டி.எஸ்.ரவிக்குமார் தலைமை தாங்கினார், முன்னாள் நகர மன்ற தலைவர் எம்.ஜி.கே. கோபிகண்ணன், முன்னாள் வார்டு கவுன்சிலர் தசரதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் நகராட்சிக்கு உட்பட்ட வல்லாஞ்சேரி, தைலாவரம், கிழக்கு பொத்தேரி, மேற்கு பொத்தேரி, செங்குன்றம், பேரமனூர், சட்டமங்கலம், மறைமலைநகர், மறைமலைநகர் தொழிற்பேட்டை, சித்தனூர், கடம்பூர், களிவந்தபட்டு, நின்னகரை,  நின்னகாட்டுர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அதிமுக வேட்பாளர் கஜேந்திரன் தெரு தெருவாக சென்று பொதுமக்களிடையே இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்கும்படி, தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது கூட்டணி  கட்சிகளான பாமக, பா.ஜ. தமாகா, புரட்சி பாரதம் மற்றும் அதிமுக நகர, பேரூர், ஊராட்சி கிளை கழக நிர்வாகிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

Tags : Chengalpattu ,AIADMK ,Gajendran ,
× RELATED செங்கல்பட்டு ஜிஹெச் வளாகத்தில்...