×

செங்கல்பட்டு ஜிஹெச் வளாகத்தில் தேங்கும் மருத்துவ கழிவுகளால் துர்நாற்றம்: நோயாளிகள் கடும் அவதி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் தேங்கும் மருத்துவ கழிவுகளால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு தினமும் ஏராளமானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். ஏராளமானோர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். நோயாளிகளை பார்க்க தினமும் ஏராளமானோர் வருகின்றனர். இதனால் இந்த மருத்துவமனை பரபரப்பாக காணப்படும்.

இந்த மருத்துவமனையில் தினமும் சேரும் குப்பைகள் மற்றும் மருத்துவ கழிவுகள் முறையாக அள்ளப்படாமல் தேங்கி கிடக்கிறது. மேலும், மருத்துவமனை வளாகத்தில் உள்ள செவிலியர் மற்றும் மருத்துவ கல்லூரி மாணவ-மாணவிகள் விடுதிகளின் உள்ள கழிவறை மற்றும் குளியலறையில் இருந்து வரும் கழிவுநீர், மருத்துவமனையில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் சாக்கடை போல் தேங்கி நிற்கிறது. மேலும், குப்பை மற்றும் பல்வேறு மருத்துவ கழிவுகளும் குளத்தில் மலைபோல் குவிந்து கிடக்கின்றன. இதனால் கடுமையான துர்நாற்றம் வீசுகிறது.

இந்த கழிவுகளில் இருந்து அதிகளவு கொசுக்கள் உற்பத்தியாகி உள்நோயாளியாக சிகிச்சை பெறுபவர்கள் மற்றும் அவர்களை பார்க்க வருபவர்களை கடிக்கிறது. மேலும், மருத்துவமனையை ஒட்டிய அண்ணாநகர் குடியிருப்பு பகுதி மக்களும் கொசுக்கடியால் அவதிப்படுகின்றனர். எனவே நோய் பரவும் முன் மருத்துவமனை வளாகத்தில் சாக்கடை குளம் போல் தேங்கியுள்ள மருத்துவ கழிவுகளை அகற்றி, சுகாதார பணிகளை மேற்ெகாள்ள கலெக்டர் மற்றும் மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

The post செங்கல்பட்டு ஜிஹெச் வளாகத்தில் தேங்கும் மருத்துவ கழிவுகளால் துர்நாற்றம்: நோயாளிகள் கடும் அவதி appeared first on Dinakaran.

Tags : Chengalpattu GH ,Chengalpattu ,Chengalpattu Government Hospital ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு ரயில்வே மேம்பால பாதையை...