×

உத்திரமேரூரில் சமுதாய கூடம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல்

 

உத்திரமேரூர், மே 31: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் பேரூராட்சியில் மொத்தம் 18 வார்டுகள் உள்ளன. இதில் பட்டஞ்சேரி, நீரடி, மணித்தோட்டம், நல்லூர், ஓங்கூர், குப்பையநல்லூர், கல்லமாநகர், மல்லிகாபுரம், மல்லியங்கரணை, பருத்திக்கொள்ளை, ஆணைப்பள்ளம், காக்கநல்லூர், வேடபாளையம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் சுமார் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இப்பகுதி மக்கள் தங்களது திருமணம், நிச்சயதார்த்தம், பிறந்தநாள் விழா, வளைகாப்பு போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கும் சுயஉதவி குழு கூட்டங்கள் போன்ற பொது நிகழ்ச்சிகளுக்கும் உத்திரமேரூரில் உள்ள தனியார் திருமண மண்டபங்களை நாட வேண்டியுள்ளது.
உத்திரமேரூர் பேரூராட்சியில் உள்ள தனியார் திருமண மண்டபங்களில் குறைந்தபட்ச வாடகையாக ரூ.30 ஆயிரம் முதல் ரூ.1 லட்சம் வரை வாடகை வசூலிக்கப்படுகிறது.

இதனால் ஏழை, எளிய மக்கள் தங்களது சுபநிகழ்ச்சி மற்றும் பொது நிகழ்வுகளை தனியார் திருமண மண்டபங்களில் நடத்திட அதிக செலவீனம் ஏற்படுவதால், பொதுமக்கள் கடும் நிதி சுமைக்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது. இதனைபோக்கும் வகையில் உத்திரமேரூர் பேரூராட்சியில் அனைத்து நிகழ்ச்சிகளும் நடத்திடும் வகையில் புதியதாக சமுதாய கூடம் அமைத்துத்தர வேண்டும் என உத்திரமேரூர் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

The post உத்திரமேரூரில் சமுதாய கூடம் அமைக்க வேண்டும்: பொதுமக்கள் வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Uttaramerur ,Kanchipuram District ,Pattanchery ,Neeradi ,Manithottam ,Nallur ,Ongur ,Garbiyanallur ,Kallamanagar ,Mallikapuram ,Malliankaranai ,Parutchichai ,Anaipallam ,Kakkanallur ,Vedapalayam ,
× RELATED மனைவியுடனான தகாத உறவை கண்டித்ததால்...