×

டீசல் விலை உயர்வை கண்டித்து தொண்டியில் மீனவர்கள் போராட்டம்

தொண்டி, மார்ச் 20:  டீசல் விலை உயர்வை கண்டித்து தொண்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விசைப்படகு மீனவர்கள் கருப்புக்கொடி கட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர். தொண்டி அருகே உள்ள லாஞ்சியடி, சோலியககுடி மீனவர்கள் டீசல் விலையை குறைக்க கோரி நேற்று விசைப்படகுகளில் கருப்பு கொடி கட்டினர். கையில் கருப்பு கொடி ஏந்தி மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷம் எழுப்பினர்.

எம்.வி.பட்டிணம் தலைவர் ராஜமாணிககம், சிங்காரவேலன் நகர் தலைவர் பதினெட்டாம்படியான், செல்வராஜ் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஏற்றுமதியாகும் கடல் உணவு பொருள்களுக்கு டீசல் விலை ஏற்றத்திற்கு தகுந்தார் போல் விலை ஏற்றம் வேண்டும், மீன்பிடிதடை காலங்களில் வழங்கப்படும் தொகையை அதிகரித்து தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். கோபி நன்றி கூறினார்.

Tags : Tondi ,
× RELATED விழிப்புணர்வு கூட்டம்