சென்னை, ஜூலை 30: சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: பெருநகர சென்னை மாநகராட்சியில் சொத்து வரி வசூலிப்பதற்கான சிறப்பு முகாம் கடந்த 3ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்று வரையிலான காலத்தில், ரூ.157.39 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. நாளை வரை நடைபெறும். நிலுவை சொத்து வரியினை செலுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக நேற்று எழும்பூரில் உள்ள சவுத் இந்தியா ஓட்டல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் நிலுவைத் தொகை ரூ.8,38,850 செலுத்தாத காரணத்தினால் சீல் வைக்கப்பட்டது.
மேலும்தியாகராயநகர், உஸ்மான் சாலையில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் சில்க்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சொத்துவரி நிலுவைத் தொகை ரூ.15,91,494 செலுத்தாத காரணத்தினால் மாநகராட்சி அலுவலர்கள் மூலம் பூட்டி சீல் வைக்கப்பட்டது. எனவே, நிலுவை சொத்து வரியினை செலுத்தாதவர்கள் நாளைக்குள் செலுத்தி அபராத வட்டியினையும், மேல்நடவடிக்கையினையும் தவிர்த்திட வேண்டும்.
