×

கே.வி.குப்பம் ஆட்டுச்சந்தையில் வியாபாரம் மந்தம்: விவசாயிகள் கவலை

 

கே.வி.குப்பம், ஜூலை 28: கே.வி.குப்பம் ஆட்டுசந்தையில் வியாபாரம் மந்தமாக நடந்ததால், விவசாயிகள் கவலையடைந்தனர்.கே.வி.குப்பம் சந்தைமேடு பகுதியில் திங்கள் தோறும் ஆட்டுச்சந்தை நடைபெறுவது வழக்கம். சென்ற மாதங்களில் உள்ள வாரங்களில் ஆடித் திருவிழா போன்ற உள்ளுர் விழாக்கள் அதிகமாக நடைபெற்றதால், கணிசமான ஆடுகளை வியாபாரிகள் வாங்கி சென்றனர். இதனால் வியாபாரம் அமோகமாக நடந்தது. அதேபோல், இந்த வாரமும் ஆட்டுசந்தை நடைபெறும் என்ற மிகுந்த எதிர்பார்ப்புடன் நேற்று காலை வழக்கம் போல் ஆட்டுச்சந்தை கூடியது. இதில் கே.வி.குப்பம் உள்ளிட்ட சுற்றப்புற கிராமங்களில் இருந்தும், குடியாத்தம், காட்பாடி, சித்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் நூற்றுக்கணக்கான ஆடுகள் கொண்டுவரப்பட்டன.

சராசரியாக ஆடுகளின் விலை ரூ.6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை குறைந்த விலைக்கு போனதால், ஆடுகள் விற்க வந்த விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் வேதனையடைந்தனர். மேலும், அதிகளவில் வெள்ளாடுகளும், குட்டி ஆடுகளும் வரத்து இருந்ததால், ஆடுகள் வாங்க வந்தவர்கள் பல்வேறு ரகங்கள் கொண்ட ஆடுகள் விற்பனைக்கு வரும் என எதிர்பாரத்து ஏமாற்றமடைந்தனர். மேலும், எதிர்பார்த்த விலையில் வியாபாரம் நடைபெறாததால், சிலர் ஆடுகளை விற்க முடியாமல் வீட்டிற்கு கொண்டு சென்றனர். நேற்று நடைபெற்ற சந்தையில் வியாபாரம் மந்தமாகவும், வரும் வாரத்தில் ஆடிக்கிருத்திகை வருவதால், வியாபாரம் மந்தமாகவே இருக்கும் என விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் சோகத்துடன் தெரிவித்தனர்.

 

Tags : K.V.Kuppam ,Aadi festival ,
× RELATED வரும் 30ம் தேதி தொழில் முனைவோருக்கான...