வேலூர், ஜூலை 27: வேலூரில் ெதாழிலாளியை கத்தியால் குத்திய வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் ஓல்டு டவுன் பகுதியை சேர்ந்தவர் அஜய்(29), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 24ம் தேதி இரவு அங்குள்ள பிள்ளையார் கோயில் அருகே நண்பருடன் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த அதே பகுதியைச் சேர்ந்த பாபு(35)வின் பெயரை கூறி அஜய் ஏதோ பேசியதாக கூறப்படுகிறது. இதனால் பாபு, அஜய்யிடம் என்னை பற்றி என்ன பேசுகிறாய்? என கேட்டுள்ளார். இதனால் அவர்களிடையே தகராறு ஏற்பட்டது.
ஆத்திரம் அடைந்த பாபு, தன்னிடம் இருந்த கத்தியால் அஜய்யை சரமாரியாக குத்தினாராம். செங்கற்களாலும் தாக்கினாராம். இதில் படுகாயம் அடைந்த அஜய் அரசு பெண்ட்லெண்ட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். இதுகுறித்து நேற்று முன்தினம் வேலூர் தெற்கு போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை தேடி வருகின்றனர்.
