×

லட்சக்கணக்கானோர் திரண்ட பூரி ஜெகந்நாதர் ரத யாத்திரையில் நெரிசலில் சிக்கி 2 பேர் பலி: 200 பேர் காயம்

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலம் பூரியில் உள்ள 12ம் நூற்றாண்டை சேர்ந்த பழமையான ஜெகந்நாதர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை உலகப் புகழ் பெற்றது. இந்த ரத யாத்திரை நேற்று நடந்தது. தேர்கள் கோயிலின் கிராண்ட் ரோடு பகுதியில் வந்த போது லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

திடீரென பக்தர்கள் கூட்டம் அதிகரித்ததால் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் கூட்ட நெரிசலில் சிக்கி பலர் மயக்கமடைந்தனர். 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. 60 வயது முதியவர் உள்பட 2 பேர் நெரிசலில் சிக்கி பலியானார்கள்.

Tags : Puri Jagannatar Ratha Yatra ,Bhubaneswar ,Ratha Pilgrimage ,Jagannatar Temple ,Puri, Odisha ,Thars ,Grand Road ,
× RELATED நவோதயா வித்யாலயா பள்ளி குறித்த வழக்கு...