×

தம்மம்பட்டி அருகே ஆட்டோ கவிழ்ந்து 12பெண்கள் காயம்

தம்மம்பட்டி, மார்ச் 13: தம்மம்பட்டி அருகே உலிபுரம் பகுதியை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பெண்கள், உலிபுரம்புதூரில் 100நாள் வேலை செய்து வருகின்றனர்.நேற்று வழக்கம் போல், 15க்கும் மேற்பட்ட பெண்கள், சரக்கு ஆட்டோவில் பணிக்கு சென்றனர். அப்போது உலிபுரம் அணைக்கரை பகுதியில் ஆட்டோ சென்ற போது, கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 12பெண்கள் காயமடைந்தனர். அவர்களை மீட்டு, தம்மம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் பலத்த காயமடைந்த 3 பேர், ஆத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Tags : Thammampatti ,
× RELATED ₹17 லட்சத்திற்கு மஞ்சள் விற்பனை