×

வாக்குப்பதிவு இயந்திரம் செயல் விளக்கம் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாம்

திருச்சி, மார்ச்13: திருச்சி மாவட்டத்தில் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் முகாமின் முதல் சுற்று மார்ச் 15ம் தேதி முதல் மார்ச் 20ம் தேதி வரையிலும், இரண்டாம் சுற்று மார்ச் 22ம் தேதி முதல் மார்ச் 27ம் தேதி வரையிலும், திங்கள், வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் நடைபெற உள்ளது. இமமுகாமில் 1 முதல் 19 வயது வரையிலான அனைத்து ஆண், பெண் குழந்தைகளுக்கும் மற்றும் 20 முதல் 30 வயது வரையிலான அனைத்து பெண்களுக்கும் (கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் தவிர) குடற்புழு நீக்க மாத்திரை வழங்கப்பட உள்ளது. விடுபட்ட நபர்களுக்கு மீண்டும் மார்ச் 29ம் தேதி வழங்கப்பட உள்ளது.

திருச்சி மாவட்ட கிராமப்புறங்களில் 4,94,813 குழந்தைகளும், நகர்ப்புறங்களில் 2,58,176 குழந்தைகளும், மொத்தம் 7,52,989 குழந்தைகள் இம்முகாமில் பயனடைவர். 20 வயது முதல் 30 வரையிலான பெண்கள் கிராமப்புறங்களில் 1,03,912, நகர்ப்புறங்களில் 80,579, மொத்தம் 1,84,491 பெண்களுக்கு துணைசுகாதார நிலையங்கள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், கிராம சுகாதார செவிலியர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் வழங்கப்பட உள்ளது.

Tags : National Deworming Pill Distribution Camp ,
× RELATED போலி பாஸ்போர்ட்டில் மலேசியா செல்ல முயன்றவர் கைது