×

தேர்தல் பணியில் ஈடுபடும் 8500 ஆசிரியர்களும் தடுப்பூசி போட உத்தரவு

திருப்பூர்,மார்ச் 12: திருப்பூர் மாவட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் அவசியம் தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டுமென மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். தேர்தல் பணியின் போது தொற்று ஏற்படாமல் இருக்க தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள் அனைவரும் பாதுாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ‘கோவிட்-19’ தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டுமென அறிவித்துள்ளது. இந்நிலையில் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரமேஷ் அனுப்பிய சுற்றறிக்கையில், சட்டசபை தேர்தலில், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து 8 ஆயிரத்து 500 ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி துவங்கியுள்ளது. அனைவரும், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு சென்று கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED அமராவதி பூங்காவில் தென்னை மரங்கள், சிற்றுண்டிச்சாலை பொது ஏலம்