×

சிறப்பு பேருந்துகள் இயக்கம் நெடுங்குடி கைலாசநாதர் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபாடு உடல்நல குறைவால் சாவு அடையாளம் தெரியாத மூதாட்டி உடல் அடக்கம்

பொன்னமராவதி, மார்ச் 12: பொன்னமராவதியில் இறந்து கிடந்த அடையாளம் தெரியாத மூதாட்டி உடல், வருவாய்த்துறை, போலீசார் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது.பொன்னமராவதி தாலுகா அலுவலகம், பேருந்து நிலையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 75 வயது மதிக்கத்தக்க மூதாட்டி 6 மாதமாக சுற்றி திரிந்தார். இந்நிலையில் உடல்நிலை குறைவால் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில் அந்த மூதாட்டி இறந்து கிடந்தார். இந்த தகவல் கிடைத்ததும் பெயர், விலாசம் தெரியாத மூதாட்டி உடலை இன்ஸ்பெக்டர் தனபாலன், வருவாய் ஆய்வாளர் ஜோதி, கிராம நிர்வாக அலுவலர் அப்பாத்துரை கைப்பற்றி பொன்னமராவதி மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

Tags : Nedungudi Kailasanathar Temple ,
× RELATED பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை